சந்தானத்தின் ‘தில்லுக்கு துட்டு’ ; பார்ட்-2வுக்கு போடாச்சு பூஜை..!

dillukku dhuttu-2

சந்தானம் நடித்து , தயாரித்து வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற படம் ‘தில்லுக்கு துட்டு’. பேய்ப்படங்களிலேயே இதுவரை இல்லாத நையாண்டி கலந்த காமெடிப்படமாக உருவான இந்தப்படத்தை ராம்பாலா இயக்கியிருந்தார். இவர்தான் சந்தானத்தை லொள்ளுசபா நிகழ்ச்சி மூலம் பிரபலப்படுத்தியவர். இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

‘தில்லுக்கு துட்டு’ படம் வெளியாகி ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்ட நிலையில் தற்போது இந்தப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. இப்படத்தின் பூஜை இன்று ஹைதராபாத்தில் வைத்து நடைபெற்றது.

இதில் நாயகன் சந்தானம், நாயகி தீப்தி ஷெட்டி, இயக்குநர் ராம்பாலா, ஒளிப்பதிவாளர் தீபக் குமார்பதி , இசையமைப்பாளர் ஷபிர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறவுள்ளது.