புத்தாண்டை ‘அம்மா கணக்கு’டன் துவங்கிய தனுஷ்..!

dhaush in amma kanakku
இந்த வருடம் தனது ‘வுண்டர்பார் பிலிம்ஸ்’ தயாரிப்பில் முதல் படமாக ‘அம்மா கணக்கு’ என்கிற படத்தை பூஜையுடன் துவங்கியுள்ளார் தனுஷ்.. இந்தப்படத்தில் அமலாபால், சமுத்திரக்கனி என மீண்டும் வி.ஐ.பி கூட்டணியுடன் ரேவதியையும் இணைத்திருக்கிறார்கள். இந்தப்படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கிவிட்டது.

இந்தப்படத்தை பெண் இயக்குனரான அஸ்வினி ஐயர் திவாரி என்பவர் இயக்குகிறார்.. இவர் பாலிவுட் இயக்குனரான நிதேஷ் திவாரியின் மனைவி.. பாலிவுட்டில் ‘நில் பேட்டி சன்னட்டா’ படத்தை இயக்கிய அஸ்வினி, அதன் ரீமேக்காகத்தான் ‘’அம்மா கணக்கு’ படத்தை தமிழில் இயக்குகிறார் என்று சொல்லப்படுகிறது..