பூஜையுடன் துவங்கியது ‘மாரி-2’..!

maari 2 pooja 2

தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியான படம் படம் ‘மாரி’. தற்போது இந்தப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகவுள்ளது. இந்தப் படத்தில் சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்கிறார். முதல் பாகத்தை போலவே இதிலும் ரோபோ சங்கர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

கதாநாயகிகளாக சாய்பல்லவி மற்றும் வரலட்சுமி ஆகியோர் நடிக்கின்றனர். நடிகர் கிருஷ்ணாவும் இதில் இன்னொரு முக்கிய வேடத்தில் நடிக்க மலையாள நடிகர் டொவினோ தாமஸ் இந்தப்படத்தில் இந்தப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்.

இந்தப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மேலும் ஒளிப்பதிவாளராக ஓம் பிரகாஷ், எடிட்டராக பிரசன்னா ஜி.கே, ஆடை வடிவமைப்பாளராக வாசுகி பாஸ்கர், சண்டை பயிற்சியாளராக சில்வா ஆகியரும் இதில் பங்குபெறுகிறார்கள். இந்தப்படத்தின் படப்பிடிப்பை இன்று பூஜையுடன் துவக்கியுள்ளனர். தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் வரும் ஜூலையில் தனுஷ் பிறந்தநாளன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது