தனுஷை கோபப்படுத்திய தெலுங்கு சேனல் தொகுப்பாளர்..!

dhanush walk out

பிரபலங்களிடம் பேட்டி எடுக்கும்போது அவர்கள் படம் தொடர்பான கேள்விகள் மட்டுமல்லாமல் அவர்களை பற்றிய பெர்சனல் கேள்விகளையும் கேட்கலாம் தான்.. ஆனால் அதற்கும் ஒரு எல்லை இருக்கிறது.. அதுவும் பிரபலங்கள் விரும்பினால் மட்டுமே பதில் சொல்வது அவர்களது உரிமையும்கூட..

ஆனால் சமீபத்தில் தெலுங்கு சேனல் ஒன்றின் தொகுப்பாளினி ஒருவர் கத்துக்குட்டி தனமாக நடிகர் தனுஷிடம் கேள்விகள் கேட்டு, அவர் ஆரம்பத்திலேயே மைக்கை தூக்கிப்போட்டு விட்டு வெளியேறிய பரபரப்பான நிகழ்வு அரங்கேறியுள்ளது..

தனுஷ் நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள படம் தான் ‘வி.ஐ.பி-2’.. இந்தப்படம் தமிழ் தவிர, இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வெளியாவதால் இந்தப்படத்தின் புரமோசன் நிகழ்ச்சிகளில் தனுஷ், கஜோல், சௌந்தர்யா ரஜினிகாந்த் உள்ளிட்டோர் பம்பரமாக சுழன்று வருகின்றனர்.

இந்தநிலையில் தெலுங்கின் முன்னணி சேனல் ஒன்றில் தனுஷை நேர்காணல் செய்த பெண் தொகுப்பாளினி, ‘வி.ஐ.பி-2’ படம் குறித்த தகவல்களை கேட்பதை விடுத்து, தனுஷ் பற்றி வெளியான சர்ச்சை வீடியோக்கள், தனுஷின் குடும்ப வாழ்க்கை மற்றும் சமீபத்திய தெலுங்கு சினிமாவின் போதைப்பொருள் சர்ச்சை குறித்தெல்லாம் பேட்டியின் ஆரம்பத்திலேயே சம்பந்தமில்லாமல் கேள்விகளை கேட்க ஆரம்பித்தார் அந்த தொகுப்பாளினி..

அவர் கேட்கும் விதத்தை பார்த்து நமக்கே எரிச்சல் ஏற்படும்போது, சம்பந்தப்பட்ட தனுஷின் கோபம் எப்படி இருந்திருக்கும் என்பது சொலமலேயே புரியும்.. அவர் தொடர்ந்து அப்படி கேட்கவே, தனுஷ் கோபத்துடன் மைக்கை உருவி எறிந்துவிட்டு, பேட்டியின் துவக்கத்திலேயே எழுந்துசென்றார்.. பின்னர் சேனல் நிர்வாகம் தனுஷை சமாதனப்படுத்தியத்தை தொடர்ந்து மீண்டும் அந்த பேட்டியில் தொடர்ந்து பங்கேற்றார் தனுஷ்.

முதலில் ஜூலை-28ஆம் தேதி இந்தப்படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டு பின்னர் தற்போது ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது என மறு அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..