தனுஷ் வெற்றிமாறன் நான்காவது முறை கூட்டணி சேரும் அசுரன்

asuran

பொல்லாதவன், ஆடுகளம், சில மாதங்களுக்கு முன்பு வெளியான வடசென்னை ஆகிய படங்களை தொடர்ந்து தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணி நான்காவது முறையாக அசுரன் என்கிற படத்திற்காக இணைந்துள்ளது. இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்

இந்த படத்தில் போஸ்டரில் தனுசை பார்க்கும்போது இதுவும் ஒரு புதிய கதை களத்தில், புதிய தனுஷை ரசிகர்களுக்கு காட்டும் என்றே தெரிகிறது இந்தப்படத்தின் தலைப்பில் ஏற்கனவே ஆர்.கே.செல்வமணி தயாரிப்பில் வேலு பிரபாகரன் இயக்கத்தில் அசுரன் என்கிற படம் இருபது வருடங்களுக்கு முன்பு வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது