ரிலீஸ் தேதி மோதலை தவிர்த்த தனுஷ்-சிம்பு..!

 

மறுக்க முயற்சி செய்தாலும் உண்மை அதுதான்.. ரஜினி-கமல், விஜய்-அஜித் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆனால் இரண்டு தரப்பு ரசிகர்களிடமும் என்ன தாக்கம் இருக்குமோ, அதே அளவுக்கு குறையாமல் தனுஷ்-சிம்பு படம் ரிலீஸ் ஆகும்போதும் நிச்சயம் இருக்கும். அதிலும் கடந்த மூன்று வருடங்கள் கழித்து (கெஸ்ட் ரோல்களில் நடித்தது தவிர்த்து) சிம்பு நடித்த படம் ‘வாலு’ இப்போது தான் வரும் ஜூலை-17ல் ரிலீஸ் ஆகிறது.

தனுஷ் நடித்த ‘மாரி’ படமும் ஜூலை-17ல் தான் ரிலீஸ் செய்வதாக பிளான் செய்யப்பட்டிருந்தது. ஆனால் இருவரின் படம் ஒரே தேதியில் ரிலீஸ் ஆவது ரசிகர்களிடம் தேவையில்லாத மோதலை ஏற்படுத்தி விடும் என்பதாலும், மேலும் பொதுவான ரசிகர்கள் பிரிந்து படம் பார்ப்பதால் இரண்டு படத்தின் வசூலும் குறைந்துவிடும் என்றும் விநியோகஸ்தர் தரப்பு கருதியது.

இதனை கருத்தில் கொண்டு தனுஷ், தனது ‘மாரி’ படத்தை ஒரு வாரம் கழித்து அதாவது ஜூலை-24 ல் ரிலீஸ் செய்வதாக முடிவு செய்துவிட்டார்.. தனுஷ் தயாரித்த ‘காக்கா முட்டை’யில் ஒரு சில நிமிடமே வந்துபோகும் கெஸ்ட் ரோலில் நடித்து, அந்தப்படத்தின் புரமோஷனுக்கு சிம்பு உதவினார் என்கிற நன்றிக்கடனும் இதற்கு ஒரு முக்கிய காரணம்..