சிறந்த நடிகர் தனுஷ் ; 62வது பிலிம்பேர் விருது (தமிழ்) பட்டியல்..!

நேற்று முன் தினம் நடைபெற்ற தென்னிந்திய சினிமாவுக்கான 62வது பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் தென்னிந்திய திரையுலக நட்சத்திரங்கள் கலந்துகொண்டதால், நேரு உள் விளையாட்டு அரங்கமே களைகட்டியது. இந்தவிழாவில் கமல், மம்முட்டி உட்பட சூப்பர்ஸ்டார்கள் இதில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

அதுமட்டுமல்ல ஏராளமான தென்னிந்திய பிரபலங்கள் கலந்துகொண்டனர். இந்தவிழாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளுக்கான 2014ஆம் வருட சாதனையாளர்கள் விருது வழங்கப்பட்டது. தமிழில் விருதுகள் பெற்றவர்கள் விபரம்…

சிறந்த படம் – கத்தி

சிறந்த இயக்குனர் – ஏ.ஆர்.முருகதாஸ் (கத்தி)

சிறந்த நடிகர் விருது – தனுஷ் (வேலையில்லா பட்டதாரி)

சிறந்த நடிகை விருது – மாளவிகா நாயர் (குக்கூ)

சிறந்த குணச்சித்திர நடிகர் – பாபி சிம்ஹா (ஜிகர்தண்டா)

சிறந்த குணச்சித்திர நடிகை –ரித்விகா (மெட்ராஸ்)

சிறந்த இசையமைப்பாளர் –அனிருத் (வேலையில்லா பட்டதாரி)

சிறந்த பாடலாசிரியர் – நா.முத்துக்குமார் (சைவம் – அழகு)

சிறந்த பின்னணி பாடகர் – பிரதீப் குமார் (மெட்ராஸ் – ஆகாயம் தீப்பிடிச்சா)

சிறந்த பின்னணி பாடகி – உத்ரா உன்னிகிருஷ்ணன் (சைவம் – அழகு)

சிறப்பு விருதுகள்

வாழ்நாள் சாதனையாளர் விருது – ராதிகா

சிறந்த நடிகர் சிறப்பு விருது – கார்த்தி (மெட்ராஸ்)

சிறந்த அறிமுக நடிகர் விருது – துல்கர் சல்மான் (வாயை மூடி பேசவும்)

சிறந்த அறிமுக நடிகை விருது – கேத்தரின் தெரசா (மெட்ராஸ்)

சிறந்த ஒளிப்பதிவாளர் (தென்னிந்திய அளவில்) – பி.எஸ்.வினோத் (மனம்-தெலுங்கு)

சிறந்த நடன அமைப்பாளர் (தென்னிந்திய அளவில்) – ஷோபி (கத்தி – செல்பி புள்ள)