சூப்பர்ஸ்டார் மருமகனுக்கும் மெகாஸ்டார் மகனுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

dhanush - dq birthday

ஆச்சர்யம்.. ஆனால் உண்மை.. தமிழக சூப்பர் ஸ்டாரின் மருமகனுக்கும் மலையாள மெகாஸ்டாரின் மகனுக்கும் சேர்ந்தாற்போல இன்றுதான் பிறந்த நாள்..

தனுஷ் ஒரு நடிகராக இந்த சினிமாவுக்குள் நுழைக்கப்பட்ட தினத்தில் இருந்து, தன்னை ஒரு நடிகராக அடையாளம் கண்டுகொண்ட பின்னர் தனுஷ் தொட்டதெல்லாம் உச்சம் தான். நடிகர் என்பதோடு தனது எல்லையை சுருக்கிவிடாமல் இயக்குனர் பாடலாசிரியர், தயாரிப்பாளர் என எல்லா ஏரியாவிலும் முத்திரை பதித்து வருகிறார் தனுஷ்..

அதேபோல பாலிவுட்டில் கால் பதித்து, இப்போது ஹாலிவுட்டையும் தொட்டு ஒரு தமிழனாக பெருமை சேர்த்திருக்கிறார் தனுஷ். இன்று தனுஷுக்கு பிறந்த நாள் கிப்ட்டாக ‘வி.ஐ.பி-2’ ரிலீஸ் அமைந்திருக்கவேண்டும்.. ஆள் சில காரணங்களால் அது தள்ளிப்போனாலும் எல்லாம் நன்மைக்கே என்றுதான் சொல்லத்தோன்றுகிறது.

அதேபோல அறிமுகமான முதல் படத்திலேயே ரசிகர்களின் இதயத்தில் ஒரு இடத்தை பிடித்து அமர்ந்துவிட்டவர் தான் நடிகர் துல்கர் சல்மான். தனது தந்தை மம்முட்டியின் பெயரை காப்பற்றும் விதமாக இப்போது முன்னணி இளம் ஹீரோவாக சிறப்பாக நடித்துவருகிறார். இந்த ஐந்து வருடங்களில் தென்னிந்திய மொழிகளில் முக்கியமான கமர்ஷியல் வேல்யூ உள்ள ஹீரோவாக துல்கர் சல்மான் வலம் வருகிறார்.

இன்று பிறந்தநாள் காணும் தனுஷுக்கும் துல்கர் சல்மானுக்கும் நமது behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.