வடசென்னை இரண்டு பாகம்.. நடுவுல ஒரு புதுப்படம்

vadachennai 2

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள வடசென்னை படம் வரும் அக்-17ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப்படத்தை வெற்றிமாறனின் கனவுப்படம் என்றே சொல்லலாம். காரணம் 2௦௦3ல் இருந்து இந்தப்படத்திற்கான ஸ்க்ரிப்ட்டை தயார் செய்து தற்போது அதற்கு உயிர் கொடுத்துள்ளார் வெற்றிமாறன்.

ஆனாலும் மொத்த கதையையும் சொல்வதற்கு குறைந்தது நான்கரை மணி நேரமாவது வேண்டும் என்பதால் தற்போது வெளியாவது வடசென்னை படத்தின் முதல் பாகம் தான்.. அடுத்த பாகத்திற்கான 2௦ சதவீத காட்சிகளையும் வெற்றிமாறன் எடுத்து வைத்து விட்டாராம்.

ஆனால் அடுத்த பாகத்தின் மீதிக்காட்சிகளை உடனே படமாக்கி வெளியிடும் எண்ணம் தற்போதைக்கு வெற்றிமாறன்-தனுஷ் இருவரிடமுமே இல்லையாம். வடசென்னை தாக்கத்தில் இருந்து தங்களை சற்று ஆசுவாசப்படுத்திக் கொள்ள, அடுத்ததாக வேறு ஜானரில் இருவரும் புதிய படம் ஒன்றில் இணைய உள்ளார்கள்..

அதை முடித்து விட்டு பின்னர் தான் வடசென்னை இரண்டாம் பாகத்தின் பணிகள் துவங்கப்படும் என இயக்குனர் வெற்றிமாறன் அதிகாரப்பூர்வமாகவே சொல்லிவிட்டார்.