செப்-23ல் வெளியாகிறது ‘தேவி’ சிங்கிள் ட்ராக்..!

devi-single-track

‘இது என்ன மாயம்’ படத்தை தொடர்ந்து தான் எடுத்து வைக்கும் அடுத்த ஸ்டெப் பிரமாண்டமாக இருக்கவேண்டும் என்று நினைத்த இயக்குனர் ஏ.எல்.விஜய், இன்று அதை ‘தேவி’ படம் மூலமாக சாத்தியப்படுத்தியும் இருக்கிறார்.. தமிழ், தெலுங்கு, இந்தி என மும்மொழி படமாக இதை உருவாக்கியுள்ளார்..

பிரபுதேவா, தமன்னா என்கிற க்யூட் காம்பினேஷனில் சாஜித்-வாஜித், ஜி.வி.பிரகாஷ், விஷால் மிஸ்ரா, கோபிசுந்தர் என்கிற பிரபல இசைக்கலைஞர்களின் பங்களிப்புடன் உருவாகியிருக்கிறது ‘தேவி’. இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘சல்மார்’ சிங்கிள் ட்ராக்கை நாளை (செப்-23) வெளியிடுகிறார்கள். படம் வரும் அக்-7ஆம் தேதி வெளியாகிறது.