‘தேவி’க்கு தியேட்டர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு…!

devi-success

கடந்த வெள்ளியன்று வெளியான ‘ரெமோ’, ‘றெக்க’, ‘தேவி’ என மூன்று படங்களில் சிவகார்த்திகேயன் நடித்த தேவி படம் தான் வசூல் ரீதியாக முன்னணியில் இருப்பதாக அந்த படக்குழுவினரால் சொல்லப்பட்டது. ஆனால் தேவி படத்திற்குத்தான் மக்களிடம் அதிக வரவேற்பு இருப்பதாக சொல்கிறார் இந்தப்படத்தை வெளியிட்ட ஆரா சினிமாஸ் மகேஷ்..

இன்று ‘தேவி’ படத்தின் வெற்றிச்சந்திப்பு நடைபெற்றது.. இதில் பிரபுதேவா, ஏ.எல்.விஜய், ஆர்ஜே.பாலாஜி மற்றும் ஆரா சினிமாஸ் மகேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் பேசிய மகேஷ், தேவி படத்துக்கு சுமார் 150 தியேட்டர்கள் தான் கிடைத்தது என்றும், படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இன்னும் 75 தியேட்டர்கள் அதிகரிக்கப்பட இருக்கின்றன என்றும் கூறியுள்ளார்.