பொற்கோவில் தரிசனம் செய்த ‘தேவி’ டீம்..!

devi-teami-in-amrister

இந்தி, தெலுங்கு, தமிழ் என மும்மொழிகளில் உருவாகியுள்ள ‘தேவி’ படம் வரும் அக்-7ல் ரிலீசாவக இருக்கிறது. இதனையொட்டி படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார்கள் இயக்குனர் ஏ.எல்.விஜய், பிரபுதேவா, தமன்னா, மற்றும் இதில் நடித்துள்ள சோனு சூட்..

இன்னொரு பக்கம் படத்தின் வெற்றிக்காக சிறப்பு பிராத்தனையும் செய்ய அவர்கள் தவறவில்லை. அதன் ஒரு பகுதியாகத்தான் பிரபுதேவா, தமன்னா உள்ளிட்ட சிலர் அமிர்தரஸில் உள்ள பொற்கோவிலுக்கு சென்று வழிபட்டு வந்துள்ளனர்.