‘தேவி’ தரிசனத்திற்கு நாள் குறித்த விஜய்..!

devi

பிரபுதேவா நீண்டநாட்கள் கழித்து நடித்திருப்பதாலோ என்னவோ அவர் நடித்துள்ள ‘தேவி’ படத்திற்கு நிறைய எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. அதிலும் இதில் அவருக்கு ஜோடியாக தமன்னா வேறு நடித்துள்ளார் என்பதும் படத்திற்கு கூடுதல் மைலேஜ்.. ஏ.எல்.விஜய் இயக்கத்தில் மும்மொழிகளில் தயாராகியுள்ளது இந்தப்படம்.. மும்மொழிகளில் தயாராகியுள்ள இந்தப்படத்தின் தற்போது போஸ்ட் புரொடக்சன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

ஹாரர் படமாக உருவாகியுள்ள இந்தப்படத்தை தமிழ்நாட்டில் ஆரா சினிமாஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இந்த 2016 ஆம் வருடத்தில், மிகவும் சிறப்பான நாளாகவும், அதிர்ஷ்டமான நாளாகவும் கருதப்படுவது 9.9.2016. அப்படிப்பட்ட சிறப்பான நாளுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாக, வருகின்ற செப்டம்பர் 9 ஆம் தேதி அன்று ‘தேவி’ வெளியாகிறது