‘தேவ்’ சிங்கிள் ட்ராக் டிச-14ல் ரிலீஸ்..!

கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் ‘தேவ்’ அறிமுக இயக்குனர் ரஜத் ரவிஷங்கர் இயக்கத்தில் முழுக்க முழுக்க ஆக்சன் படமாக உருவாகியுள்ள இப்படம் சுமார் 55 கோடி ரூபாய் பொருட்செலவில் மிகப்பிரமாண்டமாக உருவாகியுள்ளது..

ஆக்சன் , காமெடி, அட்வென்ஜர் கலந்து உருவாகியுள்ளகும் இந்தப்படத்தில். நாயகியாக ரகுல் ப்ரீத் சிங், பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன், அம்ருதா, விக்னேஷ், டெம்பர் (தெலுங்கு) வில்லன் வம்சி ரவி மற்றும் சிறப்பு வேடத்தில் கார்த்திக் ஆகியோர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்தப்படத்திற்காக ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் ஒரு பாடலை எஸ்.பி.பி பாடியுள்ளார். படப்பிடிப்பு முடிவடைந்தநிலையில் போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் இந்தப்படத்தின் முதல் சிங்கிள் ட்ராக்கை வரும் டிச-14ல் ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள்.