‘தேவ்’ படம் பைக் பரிசுப் போட்டி – வெற்றியாளர்கள் அறிவிப்பு

கடந்த பிப்ரவரி மாதம் கார்த்தி, ரகுல் பிரீத் சிங் நடிப்பில் தேவ் படம் வெளியானது ரஜத் ரவிசங்கர் இயக்கிய இந்தப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. இந்த படம் வெளியானதை தொடர்ந்து வாசர்களுக்கு ஒரு போட்டி வைக்கப்பட்டது. அதுவும் 3 கேள்விகள் கேட்கப்பட்டு அந்த கேள்விக்கான சரியான விடையை எழுதி அனுப்புவோர்களில் இரண்டு பேருக்கு பிஎம்டபிள்யூ பைக் பரிசாக வழங்கப்படும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த போட்டியின் வெற்றியாளர்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளனர். நவீன் குமார் என்பவரும் அபர்ணா என்பவரும் இந்த போட்டியில் வெற்றி பெற்று பரிசை தட்டிச் சென்றுள்ளனர். இவர்களுக்கு பரிசு வழங்கி வாழ்த்து கூறிய நடிகர் கார்த்தி, கவனமாகவும் மகிழ்ச்சியாகவும் பயணம் செய்யுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.