டிச-29ல் ‘தேவ்’ பாடல்கள் வெளியீடு

dev

கார்த்தி நடிப்பில் அடுத்ததாக வெளிவர தயாராக இருக்கும் படம் தேவ் கார்த்தியின் 17-வது படமான இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். இதில் என்ன ஆச்சரியம் என்றால் சூர்யாவுக்கு சூப்பர் சூப்பர் பாடல்களாக கொடுத்துள்ள ஹாரிஸ் ஜெயராஜ், கார்த்தியின் படத்திற்கு இசையமைப்பது இதுவே முதல் முறை. அதனால் இந்த படத்தின் பாடல்கள் எல்லாம் அதிரடியாக இருக்கும் என உறுதியாக நம்பலாம்

இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக மீண்டும் ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார் பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்தை ரஜத் ரவிசங்கர் என்பவர் இயக்கியுள்ளார் இந்த படத்தின் பாடல்கள் வரும் டிசம்பர் 29 ஆம் தேதி வெளியாக இருக்கிறது