கமலை சந்தித்தார் டில்லி முதல்வர்..!

kamal - gejriwal

சமீபகாலமாக கமல் நடப்பு அரசியலை கடுமையாக விமர்சித்து வருகிறார். தவிர ஊழல் இல்லாத அரசு அமையவேண்டும் என ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்தும் வருகிறார். குறிப்பாக ட்விட்டர், பிக்பாஸ் என தனக்கு வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் அவர் பேசும் கருத்துக்கு பலத்த வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்தநிலையில் டில்லி முதல்வரும், ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்து போராடியவருமான அரவிந்த் கெஜ்ரிவால் சென்னைக்கு வந்தவர், கமலை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார். விமான நிலையத்திற்கு வந்த அரவிந்த் கெஜ்ரிவாலை கமலின் இளைய மகள் அக்சரா ஹாசன் வரவேற்று அழைத்து வந்தார்.

இதுகுறித்து கமல் பேசுகையில், “கெஜ்ரிவால் என்னை சந்திக்க வேண்டும் என்று நினைத்ததை பாக்கியமாக கருதுகிறேன். நாங்கள் என்ன மாதிரி பேசியிருப்போம் என்று நீங்கள் உணருவீர்கள். ஊழலுக்கு எதிர்ப்பாளராக இருக்கும் அனைவரும் என் உறவினர்கள் தான். அந்த வகையில் எனது இந்த உறவு தொடருகிறது. எனது தந்தை காலம் முதலே எனக்கும், இந்த வீட்டிற்கும் அரசியல் தொடர்பு உள்ளது. பல விஷயங்கள் விவாதித்தோம், இனியும் விவாதிப்போம் என்றார்