திகில் கிளப்ப காத்திருக்கும் டிச-29..!

horror films in de 29

வரும் டிச-29ஆம் தேதிதான் இந்த வருடத்தின் கடைசி வெள்ளிக்கிழமை என்பதால் அந்த தேதியில் பலரும் தங்களது படங்களை ரிலீஸ் செய்ய முயன்று வருகிறார்கள். ஜெய் அஞ்சலி மீண்டும் இணைந்து நடித்துள்ள பலூன் படம், அந்த தேதியில் ரிலீசாவதற்கு முன்கூட்டியே இடம்பிடித்து வைத்துவிட்டது.

அதை தொடர்ந்து தற்போது ஜேஎஸ்கே பிலிம் நிறுவனம் தயாரித்துள்ள ‘மம்மி’ படமும் அதேநாளில் ரிலீசாக இருக்கிறது. மேலும் சங்குச்சக்கரம் என்கிற குழந்தைகளை மையப்படுத்திய படமும் வெளியாகிறது. இந்த மூன்று படங்களுக்கும் உள்ள ஒற்றுமை மூன்றுமே டெரர் கிளப்ப காத்திருக்கும் ஹாரர் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக இந்த வருட கடைசி ரசிகர்களுக்கு திகிலாகத்தான் இருக்கும்போல தெரிகிறது.