டார்லிங்கிற்கு U/A சான்றிதழ்..!

 

பொங்கல் ரேஸில் ‘டார்லிங்’ இடம் பிடித்தது இப்போது வரை ஆச்சர்யமான விஷயம் தான்… ‘என்னை அறிந்தால்’, ‘கொம்பன்’ படங்களுக்குத்தான் ‘டார்லிங்’  தனது நன்றியை சொல்லவேண்டும்.. ஜி.வி.பிரகாஷ் முதன்முதலாக கதாநாயகனாக நடித்து வெளியாகும் படம் என்பதால் இந்தப்பொங்கலும் அவருக்கு தலைப்பொங்கல் மாதிரிதான்.

நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து இயக்கியிருக்கும் சாம் ஆண்டனுக்கு சிருஷ்டி, நிக்கி கல்ராணி என படத்தின் இரண்டு கதாநாயகிகளும் நடிப்பில் ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார்கள்.. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கியுள்ளனர். என்றைக்குமே காமெடி கலந்த ஹாரர் படங்கள் ரசிகர்களை ஏமாற்றியதில்லை.. அந்தவகையில் இந்த ‘டார்லிங்’கும் பொங்கலுக்கு புது அனுபவத்தை தரும் என நம்பலாம்…