‘காக்கா முட்டை’ குழந்தைகளின் படிப்பு இனி தனுஷ்-வெற்றிமாறன் பொறுப்பு..!

ஒரு தயாரிப்பாளராக தனுஷ் தயாரித்த ‘காக்கா முட்டை’ படம் தியேட்டரில் ரிலீஸ் ஆவதற்கு முன்னரே, அவர் போட்ட முதலீட்டை எந்தக்குறையும் இல்லாமல் எடுத்து தந்துவிட்டது.. அத்துடன் தேசிய விருது உட்பட பல சர்வதேச விருதுகளையும் வாங்கி வந்து படத்தை தயாரித்த தனுஷையும் வெற்றிமாறனையும் பெருமைப்படுத்திவிட்டது.

அந்த சந்தோஷத்தில் வெற்றிமாறன், காக்கா முட்டைகளாக நடித்த இரண்டு சிறுவர்கள் மட்டுமில்லாமல், இந்தப்படத்தில் நடித்த அனைத்து சிறுவர்களின் படிப்பு செலவையும் ஏற்றுக்கொள்வோமே என தனுஷிடம் ஒரு யோசனை சொல்ல, அதை முழுமனதாக ஏற்றுக்கொண்ட தனுஷ் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது அதை அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்துவிட்டார்.

“வெற்றிமாறன் தான் இந்த யோசனையை சொன்னார்.. நல்ல விஷயம் தானே.. இத்தனை பெருமையை வாங்கித்தந்த அவர்களுக்கு ஏதாவது செய்யணும்.. அதனால் இந்தப்படத்தில் நடித்த அத்தனை பையன்களும் தாங்கள் எதுவரை படிக்க விரும்புகிறார்களோ அதுவரை படிக்கும் செலவை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்” என்றார் தனுஷ்.