“நான் தான் சின்ன காக்கா முட்டை” – தனுஷின் பிளாஸ்பேக்..!

டெல்லி சென்று ‘காக்கா முட்டை’ படத்துக்கான தேசிய விருதுகளை பெற்றுவந்த சந்தோஷத்தில் அதை பகிர்ந்துகொள்ள பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார் தனுஷ்.. இந்த ஸ்கிரிப்ட்டை இயக்குனர் மணிகண்டன் எழுதியதும், அதை வெற்றிமாறன் தயாரிக்கலாம் என முடிவு செய்து, தனுஷிடம் அனுப்பி வைத்ததும், அதற்கு தனுஷ் உடனே ஒப்புக்கொண்டதும் என எல்லாவற்றிற்கும் ஒரே காரணம் இவர்களின் சிறுவயது நினைவுகளை இந்தக்கதை ஞாபகப்படுத்தியது தானாம்.

இந்தப்படத்தில் சின்ன காக்கா முட்டை, பெரிய காக்கா முட்டையாக நடித்த சிறுவர்களுக்குத்தான் தேசிய விருது கிடைத்துள்ளது. இதுபற்றி தனுஷ் பேசும்போது, “எங்க ஊர்ல நானும் என் அண்ணனும் இந்த மாதிரி சுத்தின காலங்கள் உண்டு.. நான் தான் சின்ன காக்கா முட்டை.. எங்க அண்ணன் செல்வராகவன் தான் பெரிய காக்கா முட்டை. வறுமையில் வாழ்வதிலேயும் இன்பம் இருக்குங்கிறத நானும் உணர்ந்திருக்கிறேன்” என்றார் நெகிழ்ச்சியாக