தாதா-87 மீண்டும் கோடை விடுமுறையில் ரீ-ரிலீஸ்

இன்றைய காலகட்டத்தில் ஒரு படத்தின் மறுவெளியீடு என்பதே இல்லாமல் போய்விட்டது.. அப்படி ஒரு வாய்ப்பு இருந்ததால் தான் நரேன், பாவனா நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் 2006ம் ஆண்டு வெளியான படம் “சித்திரம் பேசுதடி” படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது..

இந்தப்படம் முதலில் வெளியாகியாகிய போது நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் போதிய திரையரங்குகள் கிடைக்காததால் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. ஆனால் மீண்டும் ஆஸ்கர் ரவிசந்திரன் இப்படத்தை வாங்கி ஆஸ்கர் பிலிம்ஸ் பேனரில் தமிழகமெங்கும் மறுவெளியீட்டில் படம் பெறும் வெற்றி அடைந்தது.

அதே போல கலை சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய் ஸ்ரீ இயக்கத்தில் சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி, ஸ்ரீ பல்லவி நடிப்பில் உருவான மார்ச் 1 அன்று உலகெங்கும் வெளியான “தாதா 87″ திரைப்படத்தையும் மீண்டும் ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள்.

தாதா 87 திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் இத்திரைப்படம் தமிழகத்தில் முக்கியமான ஏரியாக்களில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் திரையிட முடியவில்லை. இந்திய சினிமா வரலாற்றில் ஆண் பெண் வேடத்திலும், பெண் ஆண் வேடத்திலும் நடித்துள்ளனர், ஆனால் ஒரு பெண் திருநங்கை வேடத்தில் நடித்துள்ளது இதுவே முதல் முறை. ஸ்ரீ பல்லவியின் இந்த துணிச்சலான முடிவுக்கு பலதரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் வந்த வண்ணம் உள்ளன.

மேலும் இப்படத்தை பார்த்த மக்கள் கூறிய நிறை குறைகளை ஆராய்ந்து பல மாறுதல்களை செய்து புது பொலிவுடன் கோடை விடுமுறை கொண்டாட்டமாக வெளியாகவுள்ளது.