அசோக்கிற்கு மறுவாழ்வு தருமா ‘கேங்ஸ் ஆப் மெட்ராஸ்’..!

gangs of madras

இன்று முன்னனி இயக்குனர்களாக விளங்கும் பல இயக்குனர்களை தனது தயாரிப்பு நிறுவனம் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் மூலமாக அறிமுகபடுத்தி தமிழ் சினிமாவில் புதிய அத்தியாத்தை உருவாக்கியவர் தயாரிப்பாளர் சி.வி.குமார்.

வெற்றிகரமான தயாரிப்பாளராக தன்னை நிருபித்து காட்டிய சி.வி.குமார் “மாயவன்” வெற்றி படம் மூலமாக இயக்குனராகவும் தன்னை இன்னும் ஒருபடி உயர்த்திக்கொண்டார். தற்போது, தனது இரண்டாவது படமாக “கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்” எனும் புதிய படத்தை இயக்குகிறார்.

இதில் அசோக் குமார் கதாநாயகனாக நடிக்கிறார்.. இவர் பிடிச்சிருக்கு, முருகா ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தவர்.. சி.வி.குமார் மூலம் இவரது திரையுலக வாஸ்க்கை வெளிச்சம் பெரும் என நம்பலாம்.

மேலும் பிரயங்கா ருத் கதாநாயகியாக நடிக்க , வேலு பிரபாகரன், டேனியல் பாலாஜி, ஆடுகளம் நரேன், பகவதி பெருமாள், இயக்குனர் ராமதாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சென்னையில் துவங்கிய “கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்” படத்தின் படப்பிடிப்பு தற்போது துரிதமாக நடைபெற்று வருகிறது.