காமெடி நடிகரை கண்கலங்க வைத்த சி.எஸ்.அமுதன்..!

sebastian saba in tamizpadam 2.0

தமிழ்ப்படம் என டைட்டில் வைத்து ஹிட் சினிமாக்களில் உள்ள காட்சிகளை எல்லாம் கலாய்த்து காமெடி தோரணம் கட்டியவர் இயக்குனர் சி.எஸ்.அமுதன்.. முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது அடுத்த படத்திற்கு ‘ரெண்டாவது படம்’ என டைட்டில் வைத்து அதிரவைத்தவர்… ஆனால் அந்தப்படம் சில காரணங்கள் இன்னும் வெளியாகவில்லை..

இந்தநிலையில் மிர்ச்சி சிவாவை வைத்து தற்போது ‘தமிழ்ப்படம் 2.O’ என்கிற படத்தை இயக்கி வருகிறார். அரசியல் நையாண்டியாக இந்தப்படம் உருவாகி வருகிறது.

இந்தப்படத்தில் காமெடி நகராக செபாஸ்டியன் சபா என்பவரை அறிமுகப்படுத்தி உள்ளார் சி.எஸ்.அமுதன். ஏற்கனவே ரெண்டாவது படம்’ இயக்கியபோது அதில் ஒரு சிறிய கேரக்டரில் செபாஸ்டியன் சபாவை நடிக்க வைத்திருந்தாராம்.

இப்போது ‘தமிழ்ப்படம் 2.௦’வில் மிர்ச்சி சிவாவுக்கு எதிர் குரூப்பாக வரும் சதீஷுக்கு வலது கையாக முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரில் செபாஸ்டியன் சபாவை நடிக்க வைத்திருக்கிறார். சொல்லப்போனால் கடந்த ஆறு வருடங்களாக செபாஸ்டியன் சபாவை சுத்தமாக மறந்துவிட்ட நிலையில், ரெண்டாவது படம் ட்ரெய்லரை பார்த்ததும் தான் இயக்குனருக்கு இவரை பற்றிய ஞாபகமே வந்ததாம்.

அதன்பிறகு அவரை அழைத்து இந்த வாய்ப்பை கொடுக்கவே ரொம்பவே நெகிழ்ந்து போனாராம் செபாஸ்டியன் சபா. தனியார் தொலைக்காட்சியில் நகைச்சுவை நிகழ்ச்சி, கேண்டிட் கேமரா உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து வரும் தனக்கு‘‘தமிழ்ப்படம் 2.௦’ ஒரு காமெடி நடிகராக இன்னும் வெளிச்சம் கொடுக்கும் என திடமாக நம்புகிறார் செபாஸ்டியன் சபா.