‘பூஜை’யின் பலன் எல்லாம் வேந்தருக்குத்தான்….!


‘பூஜை’ படம் ஆரம்பித்ததும் தெரியவில்லை.. நடந்ததும் தெரியவில்லை.. இதோ இப்போது படப்பிடிப்பு முடியும் தறுவாயை நெருங்கிவிட்டது. வேகம்.. வேகம்.. வேகம்.. அதுதான் ஹரி என்கிற ஹைஸ்பீடு எஞ்சின்.. இதற்கு விஷால் என்னும் பெட்ரோலை ஊற்றினால்.. கேட்கவா வேண்டும்.

‘தாமிரபரணி’ படத்திற்கு அடுத்து விஷால்-ஹரி இணையும் இந்தப்படம் முக்கோண ஆக்‌ஷன் கதையாக உருவாகிறது. விஷாலுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். இந்தப்படத்தில் போலீஸ் அதிகாரியாக மிக முக்கியமான வேடத்தில் நடிக்கிறார் சத்யராஜ். மேலும் ராதிகா, கௌசல்யா, சித்தாரா, ரேணுகா, மனோபாலா, இமான் அண்ணாச்சி, ஆர்.சுந்தர்ராஜன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே உண்டு.

யுவன் சங்கர் ராஜா இசையில் ஒரு பாடலுக்கு அருமையான நடனம் ஆடியிருக்கிறார் ஆண்ட்ரியா. விஷால் தனது சொந்த தயாரிப்பாக உருவாக்கியுள்ள இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைவதற்குள்ளாகவே இதன் வெளியீட்டு உரிமையை மிகப்பெரிய விலைக்கு வாங்கியிருக்கிறது வேந்தர் மூவிஸ். ஆக ‘பூஜை’யின் மூலம் வேந்தர் மூவிஸுக்கு செம அறுவடை காத்திருக்கிறது.