நடிகர்சங்கத்தின் மீது நீதிமன்றம் தொடுத்த இரண்டு அம்புகள்..!

 

நடிகர்சங்க தலைவர்களை அவதூறாக பேசினார் என்று நகைச்சுவை நடிகர் குமரித்துவை இரண்டு வருடங்களுக்கு முன் நடிகர் சங்கத்தை விட்டு நீக்கி உத்தரவிட்டார் ராதாரவி. ஆனால் இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் குமரிமுத்து.. இதையடுத்து தற்போது குமரிமுத்துவை நீக்கியது செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நடிகர்சங்க தேர்தலை வரும் ஜூன்-15ஆம் தேதி நடத்துவதாக அறிவித்திருந்தார் சங்க பொதுச்செயலாளரான ராதாரவி. ஆனால் வேலை நாளான ஜூன்-15ல் நடிகர்சங்க தேர்தலை நடத்துவதற்கு பதிலாக விடுமுறை நாளான ஜூன்-19ஆம் தேதி ஞாயிறு அன்று தேர்தலை நடத்தினால் அனைவரும் ஓட்டுப்போட வசதியாக இருக்கும் என  நடிகர் சங்க தேர்தல் நடத்துவது குறித்து விஷால் தரப்பினர் நீதிமன்றத்தில் மனு அளித்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இது குறித்து பதிலளிக்குமாறு நடிகர்சங்க பொதுச்செயலாளர் ராதாரவிக்கு உத்தரவிட்டுள்ளது. விரைவில் நடிகர்சங்க தேர்தல் நடக்கவுள்ள உள்ள நிலையில் நடிகர் சங்க பொதுச்செயலாளராக உள்ள ராதாரவிக்கும் விஷாலுக்குமான வார்த்தைப்போர் நீடித்து வரும் இந்த சூழலில் தற்போதுள்ள நடிகர்சங்க நிர்வாகத்துக்கு பின்னடைவு ஏற்படுத்தும் விதமாக இரண்டு விதமான அம்புகளை தொடுத்துள்ளது நீதிமன்றம்.