விஜய் படத்தை இயக்கப்போகும் உற்சாகத்தில் இருக்கும் சிம்புதேவனுக்கு இப்போது மேலும் ஒரு சந்தோசமான செய்தி வந்து சேர்ந்திருக்கிறது. தற்போது அவர் இயக்கியுள்ள ‘ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்’ படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு ‘U’ சான்றிதழ் அளித்துள்ளனர்.
இந்தப்படத்தில் அருள்நிதி ஹீரோவாக நடிக்க, நாயகிகளாக பிந்துமாதவி, ‘உதயம் என்.எச்-4 படத்தில் நடித்த அர்ஷிதா ஷெட்டி நடித்துள்ளார். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் ‘பக்ஸ்’ நடித்த ஆக நடித்த பகவதி பெருமாள் நீண்ட இடைவெளிக்கு பிறகு முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் நாசர், மனோபாலா, ‘ஆடுகளம்’ நரேன், ஜெயபிரகாஷ், இளவரசு ஆகியோரும் நடித்துள்ளனர்.