புதிய படத்திற்காக கௌதம் கார்த்திக்குடன் இணையும் சேரன்


ஒரு கல்லூரியின் கதை, மாத்தி யோசி ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குனர் நந்தா பெரியசாமி. இவர் அடுத்ததாக இயக்கும் புதிய படத்தில் கெளதம் கார்த்திக் நாயகனாக நடிக்க அவருடன் முக்கிய வேடத்தில் இயக்குனர் சேரன் இணைந்து நடிக்கிறார். நடிகர் டாக்டர் ராஜசேகர்-ஜீவிதாவின் இரண்டாவது மகள் ஷிவாத்மிகா இதில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

மேலும் இந்தப்படத்தில் டேனியல் பாலாஜி, சரவணன், கிழக்கு சீமையிலே விக்னேஷ், சிங்கம்புலி, ஜோமல்லூரி, கவிஞர் சினேகன், நமோ நாராயணன், சௌந்தர்ராஜன், விஜய் டிவி ஜாக்குலின், மௌனிகா, மைனா, பருத்திவீரன் சுஜாதா, ஜானகி, பிரியங்கா, நக்கலைட் தனம் என ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

கடந்த வருடம் யோகிபாபு எமதர்மனாக நடித்த தர்மபிரபு வெற்றிப்படத்தை தயாரித்த ஸ்ரீ வாரி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப்படம், குடும்ப உறவுகளின் வலிமையையும் ஒற்றுமையையும் மேம்படுத்தும் விதமாக உருவாகிறது. வரும் மார்ச் மாதம் முதல் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெறவுள்ளது .