தள்ளிப்போகிறது சேரன் பட ரிலீஸ்..!

 

தியேட்டர்களுக்காக காத்துக்கிடந்து தனது படத்தை ரிலீஸ் செய்ய விரும்பாத சேரன் தானே சொந்தமாக ஆரம்பித்த விநியோக சிஸ்டம் தான் C2H.. இதன் மூலம் தன் படத்தை மட்டுமல்லாமல், வெளியிட முடியாமல் தவித்துவரும் நல்ல படங்களையும் டிவிடிக்களாக மாற்றி ரசிகர்களின் வீடு தேடிச்சென்று விற்பனை செய்வது தான் சேரனின் திட்டம்.

அதன்படி பொங்கலன்று முதல் முயற்சியாக தான் இயக்கிய ‘ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை’ படத்தை ரிலீஸ் செய்வதாக அறிவித்திருந்தார் சேரன். ஆனால் ஆரம்பம் முதலே இந்த விஷயத்தில் கொஞ்சம் எதிர்ப்பு காட்டிவந்த விநியோகஸ்தர்களும் தியேட்டர் உரிமையாளர்களும் தற்போது உண்மை நிலையறிந்து தயாரிப்பாளர்களின் நலன் கருதி முடிவெடுக்க வந்திருக்கிறார்கள்.

அவர்களுடன் பேசி முடிவெடுத்தபின் ஒரு நல்ல முடிவோடு திரையரங்குகளிலும் மற்ற முறைகளிலும் சேர்த்தே தனது படத்தை வெளியிட தீர்மானித்துள்ள சேரன், பொங்கலுக்கு தனது படம் வெளியாவதை சில கொஞ்சம் தள்ளிவைத்திருக்கிறார்.