ஒரு நாள் முன்னதாக வெளியாகும் செக்க சிவந்த வானம்

பொதுவாக எந்த மொழி என்றாலும் அங்கு திரைப்படங்கள் வெள்ளிக்கிழமை வெளியாவதுதான் வழக்கம். ஆனால் சமீப காலமாக, அது பண்டிகை நாளாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் வியாழக்கிழமையே படத்தை ரிலீஸ் செய்யும் பழக்கம் உருவாகியுள்ளது.. அந்த வகையில் விநாயகர் சதுர்த்தி அன்று சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா செப்-13 வியாழக்கிழமை வெளியாகவுள்ளது..

மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி, சிம்பு, அருண்விஜய், விஜய்சேதுபதி என மல்டி ஸ்டாரர் படமாக உருவாகியுள்ள செக்க சிவந்த வானம் படம் செப்-28ல் அதாவது வெள்ளிக்கிழமை ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.. ஆனால் அவர்களும் இந்த வியாழக்கிழமை பார்முலாவை பின்பற்றி செப்-27ஆம் தேதியே படத்தை வெளியிடுவதாக அறிவித்துள்ளார்கள்.

பண்டிகை என எதுவும் இல்லாவிட்டாலும் மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை என்பதால் அதை கணக்கிட்டு ஒரு நாள் முன்னதாகவே ரிலீஸ் செய்கிறார்கள் என்றே தெரிகிறது.