“விஷமிகளை விரட்டுங்கள்” – ‘ஒளடதம்’ தயாரிப்பாளர் ஆவேசம்!

ரெட் சில்லி ப்ளாக் பெப்பர் சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து நேதாஜி பிரபு நாயகனாக நடித்து ள்ள படம் `ஒளடதம்`. இப்படத்தை இயக்கியுள்ளவர் ரமணி. இது மருத்துவ உலகின் மோசடிகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் மெடிக்கல் த்ரில்லராக உருவாகியுள்ளது

இப்படத்தினை பிரபலப் படுத்தும் முயற்சியாக `ஒளடதம்` பெயர் பொறித்த 3 லட்சம் பேனாக்களை திரையரங்குகளில் விநியோகிக்க உள்ளனர். அதற்கான அறிமுக விழாவாக பிரமாண்ட பேனா வெளியீட்டு விழா பிரசாத் லேபில் நடந்தது. இயக்குநர்கள் பாக்யராஜ், பேரரசு, ஏ.வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலையில் பிரமாண்ட பேனா வெளியிடப் பட்டது. திரையரங்குகளில் பேனா தரும் போது` தமிழா தமிழில் கையெழுத்திடு ` என்கிற பிரச்சாரத்தையும் மேற்கொள்ளவிருக்கிறது படக்குழு .

இயக்குநர் பேரரசு பேசும்போது, “இன்று மருந்தும் செல்போனும் அத்தியாவசியமாகிவிட்டன. இந்த இரண்டும் கேடு தருபவை. மருந்தை மையப்படுத்தி எடுத்துள்ள இப்படம் வெற்றி பெற வேண்டும்.” என்று பேசினார்.

இயக்குநர் பாக்யராஜ் பேசும்போது, “தமிழில் தான் எப்போதும் நான் கையெழுத்து போடுவேன். ஆனால் தமிழில் கையெழுத்து போடுவதால் தமிழ் வளர்ந்து விடுமா? அண்மையில் ஒரு தெலுங்குப்படத்தின் படப்பிடிப்புக்கு கம்போடியா போக வேண்டியிருந்தது. அப்படிப்போன போது அங்கு அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாததால் தகவல் தொடர்பு பிரச்சினையால் நான் பாதியிலேயே ஊர் திரும்ப வேண்டியிருந்தது. சில நாடுகளில தெரிந்தும் ஆங்கிலத்தில் பேச மாட்டார்கள் இப்படிப் பல பிரச்சினைகள் உள்ளன தமிழைக் காப்பாற்ற அரசியல்பூர்வமான நடவடிக்கைகள் வந்தால்தான் முடியும். இப்படம்வெற்றி பெற வாழ்த்துக்கள்” என வாழ்த்தினார்.

படத்தின் நாயகனும் தயாரிப்பாளருமான நேதாஜி பிரபு பேசும்போது, “நான் சினிமா எடுப்பது என்று முடிவு செய்தவுடன் புதிதாக ஏதாவது கதை எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். 2013-ல் ஒரு மருந்து அதிலுள்ள மூலப்பொருள்கள் தவறானது என்று செய்திகள் வந்தன. அம்மருந்து தடை செய்யப்பட்டது. சில காலம் கழித்து அதே மருந்து தடை நீக்கம் செய்யப்பட்டது என விளம்பரம் வந்தது. இடையில் என்ன நடந்தது? இது பற்றி யோசித்தேன் இக்கதை உருவாகியது.

நாம் சாப்பிடும் உணவுப் பொருள்கள் பற்றி நம்மிடம உள்ள விழிப்புணர்வு ,நாம் சாப்பிடும் மருந்துகள் பற்றி நம்மிடம் இல்லை எவ்வளவோ தடை செய்யபபட்ட மருந்துகள் இங்கு தாராளமாக புழக்கத்தில் உள்ளன இது பற்றிய விழிப்புணர்வு இங்கு இல்லை. நாங்கள் இப்படத்துக்காக ஒரு மருந்து தயாரிக்கும் கம்பெனியில் அனுமதி வாங்கி 8 நாட் ள் படமெடுத்துள்ளோம்.

இப்போது புதிதாகப் படமெடுக்க வருபவர்கள் படத்தைக் கூட போராடி எடுத்து விடுகிறார்கள். ஆனால் வெளியிடுவது அவ்வளவு சிரமமாக இருக்கிறது. எங்களை ஏமாற்ற இங்கே ஒரு கூட்டம் அலைகிறது. தயாரிப்பாளர் கில்டிலோ, பிலிம் சேம்பரிலோ, தயாரிப்பாளர் சங்கத்திலோ ஒரு தயாரிப்பாளர் என்று மெம்பராகி இருக்கிறார்கள். அதைக்காட்டி உங்கள் படம் வெளியிட நான் உதவுகிறேன் என்று வருகிறார்கள். ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொண்டு நம்மிடம் காசு பிடுங்குகிறார்கள் அவர்களால் ஒன்றுமே செய்ய முடியாது. ஆனால் பணத்தைக் கறந்து விடுகிறார்கள். அவர்களிடம் நான் ஏமாற்றப்பட்டதற்கு ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.இப்படிப்பட்ட விஷமிகளை சங்கத்திலிருந்து நீக்க வேண்டும்” என ஆவேசமாக பேசினார்.