கோவாவில் பூஜையுடன் துவங்கியது சார்லி சாப்ளின்-2..!

charlie chaplin 2

அம்மா கிரியேசன்ஸ் டி.சிவா தயாரிக்க பிரபுதேவா, நிக்கி கல்ராணி, ஆதா ஷர்மா நடிக்க அம்ரீஷ் இசையமைக்க செளந்தர்ராஜன் ஒளிப்பதிவில் ஷக்தி சிதம்பரம் இயக்கும் ‘சார்லி சாப்ளின்-2’ படத்தின் துவக்கவிழா கோவாவில் பிரசித்தி பெற்ற சித்தி வினாயகர் கோயிலில் பூஜையுடன் துவங்கியது.

2002ல் பிரபுதேவா-பிரபு இருவரும் இணைந்து நடித்த படம் சார்லி சாப்ளின்.. ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் உருவான இந்தப்படத்தில் அபிராமி, காயத்ரி ரகுராம், மோனல் ஆகியோர் நடித்திருந்தனர். தற்போது பதினைந்து வருடங்களுக்கு பிறகு இந்தப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது.. நீண்ட நாளைக்குப்பிறகு கிரேசி மோகன் இந்தப்படத்தின் மூலம் வசனம் எழுதும் பணிக்கு திரும்பவுள்ளார்.