திருமணத்துக்கு தயாரான அடுத்த நட்சத்திர ஜோடி…!

Chandran And Anjana Will Ready For Marriage
சினிமா, சின்னத்திரை நட்சத்திரங்கள் பலரது காதலும் திருமணத்தை எட்டும் முன் எப்படியாவது கிசுகிசுவாகவது கசிந்து விடும். அட்லீ – ப்ரியா, போல ஒருசிலர் தான் டக்கென சர்ப்ரைசாக பத்திரிகையை நீட்டியவர்கள்.. இப்போது அந்த நட்சத்திர பட்டியலில் சுடச்சுட சேர்ந்துள்ளது ‘கயல்’ சந்திரன் – சன்டிவி அஞ்சனா ஜோடி.

பிரபுசாலமன் இயக்கிய ‘கயல் மூலமாக சினிமாவுக்குள் நுழைந்தவர் சந்திரன். அஞ்சனா சன் டிவி தொகுப்பாளினியாக இருந்தாலும், முக்கால்வாசி திரைப்பட விழாக்களில் தவறாமல் இடம்பெறுவதால் அவரும் வெள்ளித்திரைக்கு சொந்தக்காரர் மாதிரிதான்.

சந்திரன் சூர்யன் எப்.எம்மில் தொகுப்பாளராக இருந்தபோதிருந்தே நட்பாக இருந்த அஞ்சனாவிடம் திடீரென காதலை சொல்லி கல்யாணத்திற்கு தேதியும் குறித்துவிட்டார் சந்திரன். வரும் 29ஆம் தேதி நிச்சயதார்த்தம்.. மார்ச் 10ஆம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது.