ஜீனியஸ்.. ஏஞ்சலினா.. சாம்பியன்.. – ஜெட் வேகத்தில் சுசீந்திரன்..!

champion

இயக்குனர் சுசீந்திரன் இயக்கியுள்ள ஜீனியஸ் திரைப்படம் வருகிற அக்டோபர் 26 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதை தொடர்ந்து அவர் இயக்கியுள்ள சாம்பியன் திரைப்படத்தின் டப்பிங் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

விளையாட்டை மையமாக வைத்து ‘வெண்ணிலா கபடி குழு’, ‘ஜீவா’ போன்ற வெற்றி படங்களை இயக்கியுள்ள இவர் டைரக்சனில் அடுத்து உருவாகி வரும் ‘சாம்பியன்’ படம் புட்பாலை மையமாக கொண்டது. இதில் புதுமுகம் ரோஷன், மிர்னாலினி நாயகன் நாயகியாக நடித்துள்ளார்கள். இவர்களோடு ஜிகே.ரெட்டி, அஞ்சாதே நரேன், ஜெயப்ரகாஷ், ஆர்கே.சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்தப்படம் டிசம்பர் 2018 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதுதவிர சுசீந்திரன் இயக்கியுள்ள ஏஞ்சலினா திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது,