சி.சி.எல்-2௦15ல் இருந்து ஒதுங்கியது ஏன்..? – விஷால் விளக்கம்..!

 

நட்சத்திர கிரிக்கெட் என்றாலே கேப்டன் விஷாலும் கூடவே களத்தில் அவர் காட்டும் ஆக்ரோஷமும் தான் ஞாபகத்துக்கு வரும்.. ஆனால் இந்தமுறை  சி.சி.எல்-2௦15ல் கேப்டன்ஷிப்பில் இருந்து விஷால் விலகியுள்ளதாகவும் அவருக்கு பதிலாக ஜீவா பொறுப்பேற்றுள்ளதாகவும் செய்தி வெளியானது. இதுபற்றி தேவையில்லாத அனுமானங்கள் பரவுவதற்குள், இந்த லீக்கில் இருந்து தான் விலகியதற்கான விளக்கத்தை அளித்துள்ளார் விஷால்..

 

அதில், “தற்போது பொங்கலுக்கு நான் நடித்துவரும் ‘ஆம்பள’ படத்தை ரிலீஸ் செய்வது மற்றும் படத்தின் புரமோஷன் வேலைகளில் தீவிரமாக இருக்கிறேன்.. தவிர வருடத்திற்கு இரண்டு படமாவது தரவேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதனால் தான் இந்த 2௦15 சிசி.எல்லில் இருந்து கொஞ்சம் ஒதுங்கியிருக்கிறேனே தவிர வேறெந்த காரணமும் இல்லை’ என்று கூறியுள்ளார்.