திரையுலகினரால் அன்பாக கேப்டன் என்றும், புரட்சிக்கலைஞர் என்றும் அழைக்கப்படும் விஜயகாந்த் கலைத்துறைக்கு வந்து 40 ஆண்டுகள் ஆனதையொட்டி அவருக்கு பாராட்டு விழா சென்னையை அடுத்துள்ள படப்பையில் நேற்று நடைபெற்றது.
விழாவில் வேல்ஸ் பல்கலைக்கழக துணைவேந்தர் ஐசரி கணேசன், திரைப்பட வினியோகஸ்தர் சங்கத் தலைவர் கலைப்புலி தாணு, இயக்குனர்கள் எஸ்.பி.முத்துராமன், எஸ்.ஏ.சந்திரசேகர், ஆர்.கே.செல்வமணி, மனோபாலா, விக்ரமன், தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்க தலைவர் நாசர், நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ், மயில்சாமி, நடிகைகள் மற்றும் கலைத்துறையை சேர்ந்தவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு விஜயகாந்தை வாழ்த்தி பேசினார்கள்.