“மணிரத்னம் படத்துக்காக காத்திருக்க முடியாது” – வருண்மணியன்

 

தமிழ்சினிமாவில் இன்று புதிதாக வரும் தயாரிப்பாளர்களின் பெயர்களை ரசிகர்கள் யாரும் அவ்வளவாக ஞாபகத்தில் வைத்துக்கொள்வதில்லை.. ஆனால் வாயை மூடி பேசவும் மற்றும் காவியத்தலைவன் ஆகிய படங்களை தயாரித்த இளம் தயாரிப்பாளர் வருண்மணியன், த்ரிஷாவை திருமணம் செய்யப்போவதாக கிளம்பிய வதந்தியால் ஓவர்நைட்டில் பாப்புலராகி விட்டார்..

ஒரு தயாரிப்பாளரான வருண்மணியன் தனது காவியத்தலைவன் படம் வெளியாவதற்கு கூட பொறுமையாக காத்திருந்தவர், தற்போது மணிரத்னம் இயக்கிவரும் ஓகே கண்மணி படத்திற்காக காத்திருக்க முடியவில்லையே அதாவது எப்போ ரிலீஸ் ஆகும் என்கிற அர்த்தத்தில் (I can’t wait to watch #OkayKanmani) ட்வீட் போட்டிருக்கிறார். காரணம் அவரது மிக நெருங்கிய நண்பர்களான மணிரத்னமும் துல்கர் சல்மானும் இணைந்திருப்பதுதானாம்.