‘கூர்கா’ யோகிபாபுவுக்கு கனடா மாடல் ஜோடியா..?!

yogibabu pair

ஆம், சாம் ஆண்டன் இயக்கும் கூர்கா படத்தில் கதையின் நாயகனாக யோகிபாபு நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக வெளிநாட்டு நடிகை நடிக்கிறார் என்று கடந்த சில நாட்களாகவே ஒரு செய்தி இருந்தது. தற்போது அது அதிகாரப்பூர்மாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. கனடா மாடல் எலிஸ்ஸா, அமெரிக்க தூதர் கதாபாத்திரத்தில் இந்த படத்தில் முன்னணி நடிகையாக அறிமுகம் ஆகிறார்.

இயக்குனர் சாம் ஆண்டன் இந்த கதாபாத்திரத்திற்காக பல சர்வதேச முகங்களை பார்த்து, இறுதியாக எலிஸ்ஸா தான் சரியான தேர்வு என்று அவரை தேர்வு செய்திருக்கிறார்.

இது குறித்து சாம் ஆண்டன் கூறும்போது, “கதாபாத்திரம் மற்றும் சூழ்நிலையை சரியாக புரிந்து கொண்டு ஆடிஷனில் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இந்த படவாய்ப்பை தன்வசப்படுத்தி இருக்கிறார். எல்லோரும் நினைப்பது போல, அவர் யோகிபாபுவுக்கு ஜோடியாக நடிக்கவில்லை. காதல் காட்சிகளிலும் நடிக்கவில்லை” என்றார்.

டிசம்பரில் தொடங்கும் படப்பிடிப்பை ஒரே கட்டமாக முழுமூச்சில் முடிக்க, மொத்த குழுவும் முன் தயாரிப்பு மற்றும் ரிகர்சல் பணிகளில் இருக்கிறது. நாய் ஒன்று இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில், படம் முழுக்க நாயகனோடு, வரும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது இந்த கடத்தல் டிராமா.

தற்போது அதர்வா முரளி நடித்துள்ள ‘100’ படத்தின் இறுதிகட்ட பணிகளில் தீவிரமாக பணியாற்றி வருகிறார் சாம் ஆண்டன்.