மார்ச்-10ல் மும்முனை போட்டியை சந்திக்க தயாராகும் ‘புரூஸ் லீ’..!

3 films competition
பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்துள்ள `புரூஸ் லீ’ படம் பொங்கல் ரிலீஸாக திரைக்கு வரவிருந்தது. அதேநேரத்தில் விஜய் நடித்த `பைரவா’ படமும் திரைக்கு வந்ததால் பொங்கல் ரேஸில் இருந்து பின்வாங்கியது. அதன்பின் மார்ச்-3ல் வெளிவருகிறது என சொல்லப்பட்ட நிலையில் தற்போது மார்ச்-10ஆம் தேதி படம் உறுதியாக ரிலீஸாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்..

ஆனால், இதே தேதியில் மாயா படத்தை தயாரித்த பொடென்ஷியல் நிறுவனத்தின் அடுத்த படைப்பான ‘மாநகரம்’ படமும் வெளியாகிறது.. தவிர நடிகை விஜயலட்சுமி தயாரிப்பில் பெரோஸ் இயக்கத்தில் கிருஷ்ணா-ஆனந்தி நடித்துள்ள ‘பண்டிகை’ படம் ஒருநாள் முன்னதாக மார்ச்-9ஆம் தேதி வெளியாகிறது.. மூன்றுமே மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்கள் என்பதால் போட்டி கடுமையாகவே இருக்கும் என தெரிகிறது.