மே-26ல் பிருந்தாவனம் ரிலீஸ் ; ரிஸ்க் எடுக்கிறாரா அருள்நிதி..?

brindavanam release

அருள்நிதி நடிக்க இயக்குனர் ராதாமோகன் கைவண்ணத்தில் உருவாகியுள்ள படம் தான் ‘பிருந்தாவனம்’. கதாநாயகியாக முன்னாள் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி தான்யா நடிக்க, விவேக் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். இந்தப்படம் வரும் மே-26ஆம் தேதி ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

‘பாகுபலி-2’ அலை இந்த சமயத்தில் சற்றே ஓய்ந்துவிடும் என நினைத்துதான் இந்த அதேதியை செலக்ட் செய்திருகிறார்கள் என்றே தெரிகிறது. அதேசமயம் வரும் மே-3௦ல் தயாரிப்பாளர் சங்கம் தொடர்பான சில கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி விஷால் வேலைநிறுத்த போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதில் தியேட்டர் அதிபர்கள் சங்கமும் கலந்துகொள்ளும் என சொல்லப்பட்டிருந்தாலும் கூட, அவர்களோ இதில் கலந்துகொள்ள தங்களுக்கு உடன்பாடு இல்லை என்பது போல கூறி வருகிறார்கள்.. இந்த காரணத்தால் தான் இந்த மாதம் வெளியாகவேண்டிய ‘வனமகன்’ படம் கூட ஜூன் மாத இறுதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது..

இந்த இக்கட்டான சூழ்நிலையில் தான் ‘பிருந்தாவனம்’ படம் வரும் மே-28ல் ரிலீசாகும் என அறிவித்திருகிறார்கள்.. அப்படிஎன்றால் விஷால் அறிவித்துள்ள போராட்டம் இந்தப்படத்தின் தொடர் ஓட்டத்தை பாதிக்காதா, அல்லது மே-3௦க்குப்பின் வரும் படங்கள் தான் தியேட்டர்களில் ரிலீசாகாது என்பதால் ‘பிருந்தாவனம்’ படத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என ரிஸ்க் எடுக்கிறார்களா என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும்.