அஜித்துடன் போஸ் வெங்கட் அமைத்த விசுவாச கூட்டணி

ajith - bose venkat

சின்னச்சின கேரக்டர்களில் நடித்து வந்தாலும் சிங்கம் படத்தில் தனித்து தெரிந்தார் நடிகர் போஸ் வெங்கட். கே.வி.ஆனந்த் டைரக்சனில் வெளியான ‘கவண்’ படத்தில் மெயின் வில்லனாக நடித்த பிறகுதான் போஸ் வெங்கட்டிடம் ஒளிந்திருந்த முழுத்திறமை வெளியே தெரியவந்தது எனலாம்.

அதை தொடர்ந்து கார்த்தியின் நடிப்பில் வெளியான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படம் ஒரு படத்தில் அவருக்கான கேரக்டரின் முக்கியத்துவத்தை பறைசாற்றியது. அந்தவகையில் தற்போது சிவா-அஜித் கூட்டணி நான்காவது முறையாக இணைந்துள்ள ‘விசுவாசம்’ படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார் போஸ் வெங்கட்.