ஹாலிவுட் ஆக்சன் இயக்குனரை சமாதானப்படுத்திய பூலோகம் இயக்குனர்..!

nathan-jones-jayam-ravi fight

ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாக்கி, கிறிஸ்துமஸ் ரிலீஸாக வெளியாக இருக்கும் ‘பூலோகம்’ படத்தில் ஹாலிவுட்டை சேர்ந்த நாதன் ஜோன்ஸ் என்ற பிரபல மல்யுத்த வீரருடன் ஜெயம்ரவி மோதுகிறார் என்பது தெரிந்ததுதான்.. இந்த நாதன் ஜோன்ஸ் வெறும் மல்யுத்த வீரர் மட்டும் அல்ல, பல ஹாலிவுட் படங்களில் வில்லனாக நடித்திருக்கிறார்.

குறிப்பாக ஜாக்கிசானுடன் நடித்த போலீஸ் ஸ்டோரி படத்தின் நான்காம் பாகமான ஃபர்ஸ்ட் ஸ்ட்ரைக்கில் ஜாக்கிசானையே மிரட்டியிருப்பார் நாதன் ஜோன்ஸ். இவர் பூலோகம் படத்தின் ஸ்க்ரிப்ட்டை கேட்டதும், அதில் தான் நடிப்பதற்கான நியாயம் இருக்கிறது என்பதை உணர்ந்து அதன்பின்தான் ஒப்புக்கொண்டார்..

ஆனால் இந்தப்படத்தின் சண்டைக்காட்சிகளை வடிவமைத்த ஹாலிவுட் ஆக்சன் இயக்குனர் நாலன் ஸ்டோன் ஆரம்பத்தில் அவ்வளவு சுலபமாக ஒப்புக்கொள்ளவில்லையாம்., நாதன் ஜோன்ஸும் ஜெயம் ரவியும் மோதினால் பார்ப்பதற்கே காமெடியாக இருக்கும் என்று கூறி சண்டைக்காட்சிகளை அமைக்க மறுத்துவிட்டாராம்.

அதன்பின் படத்தின் ஸ்கிரிப்ட்டை அவருக்கும் படிக்க கொடுத்தாராம் இயக்குனர் கல்யாண கிருஷ்ணன். அதைப்படித்து பார்த்ததும் தான் கதையின் தன்மையும் ஜெயம் ரவி, நாதன் ஜோன்ஸுடன் மோதி ஜெயிப்பதற்கான தேவையும் புரிந்ததாம். அதன்பின் ஈடுபாட்டோடு சண்டைக்காட்சிகளை வடிவமைத்தாராம்.