‘பாம்பு சட்டை’ அணிகிறார் பாபி சிம்ஹா..!

 

இப்போது நடிகராக வலம் வந்தாலும் ஒரு காலத்தில் இயக்குனராக இருந்து ரசிகர்களின் நாடி பார்த்து படம் கொடுத்தவர் தானே மனோபாலா.. அந்த மனோதிடம் தானே அவரை ‘சதுரங்க வேட்டை’ என்கிற படத்தை தயாரிக்க வைத்து வெற்றிப்படமாக்கி, வசூல் மழையில் குளிப்பாட்டியது.

ருசி கண்ட பூனை சும்மா இருக்குமா..? இதோ அடுத்து ‘பாம்பு சட்டை’ படத்தை தயாரிப்பதன் மூலம் மீண்டும் பாலை குடிக்க தயாராகி விட்டது. இந்தப்படத்தை ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் இருவரும் மனோபாலவுடன் இணைந்து தயாரிக்கின்றனர்.  ‘ஜிகர்தண்டா’வில் அசால்ட் சேதுவாக கலக்கிய பாபி சிம்ஹா இந்தப்படத்தின் மூலம் ஹீரோவாக புரமோஷன் ஆகிறார்.

படத்தை புதுமுக இயக்குனர் ஆடம் தாசன் இயக்குகிறார், இவர் இயக்குனர் ஷங்கரிடம் இணை இயக்குனராக வேலை பார்த்தவர். ஏர்டெல் சூப்பர் சிங்கர் போட்டியில் வெற்றிபெற்ற அஸீஸ் அசோக் இந்தப்படத்தில்இசையமைப்பளாராக அறிமுகமாகிறார்.