விக்ரம் பிரபுவுக்கு ‘பக்கா’ ஜோடியான பிந்து மாதவி..!

விக்ரம் பிரபு-நிக்கி கல்ராணி ஜோடியாக நடிக்க ‘பக்கா’ என்கிற படம் உருவாகி வருகிறது தெரிந்த விஷயம் தான்… அறிமுக இயக்குனரான எஸ்.எஸ்.சூர்யா என்பவர் இயக்கும் இந்தப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு திருநெல்வேலி, குற்றாலம் ஆகிய பகுதிகளில் நடைபெற்று முடிந்தது..

அடுத்ததாக இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்கப்பட உள்ள நிலையில் படத்தின் இன்னொரு நாயகியாக பிந்து மாதவி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.. சில நாட்களுக்கு முன்பு, தனது அடுத்த படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என பிந்து மாதவி குறிப்பிட்டிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது..

இந்தப்படத்தில் ஒரு ஸ்பெஷல் என்னவென்றால் இதுநாள் வரை சிங்கிள் ஜோடியுடன் மட்டுமே நடித்துவந்த விக்ரம் பிரபு தற்போது முதன்முறையாக இரண்டு கதாநாயகிகளுடன் இணைந்து நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது… விக்ரம் பிரபுவுக்கு பக்கபலமாக காமெடி கேரக்டரில் சூரி நடிக்கிறார்.. ‘எங்கேயும் எப்போதும்’ இசையமைப்பாளர் சத்யா இந்தப்படத்துக்கு இசையமைக்கிறார். இரண்டாம்கட்ட படப்பிடிப்பு விரைவில் பாண்டிச்சேரியில் துவங்கப்பட உள்ளது.