வதந்தியை உடைக்கும் விதமாக புதிய பட அறிவிப்பை வெளியிடுகிறார் பிந்து மாதவி..!

‘கண்ணழகி’ நடிகை பிந்துமாதவி பற்றி நாம் அறிமுகம் செய்துவைக்க தேவையில்லை.. தமிழில் ‘வெப்பம்’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆகி, ‘கழுகு’ படத்தில் மிகச்சிறந்த நடிப்பால் கவனம் ஈர்த்தவர்.. தொடர்ந்து சரியான படங்களாக தேர்வு செய்து படத்துக்கு படம் தனது நடிப்பை மெருகேற்றி வருகிறார் பிந்துமாதவி..

இப்படி நிதானமாக, அதேசமயம் கவனமாக வெற்றிப்படிகளில் அடியெடுத்து வைத்து முன்னேறிவருகிறார் பிந்துமாதவி.. ஆனால் சில ஊடகங்களில் பிந்துமாதவி ஒரு தயாரிப்பாளரை திருமணம் செய்யப்போவதாகவும், இன்னும் சில பேரோ இருவரும் திருமணம் செய்துகொண்டு விட்டார்கள் அதனால் இனி பிந்து மாதவி நடிக்க மாட்டார் எனவும் தவறான தகவல்களை வெளியிட்டு வருகிறார்கள்…

இதுபற்றி பிந்துமாதவி தரப்பில் விசாரித்தபோது, இவை அனைத்தும் வதந்தியே என்று மறுத்துள்ளனர்.. தொடர்ந்து ஒரே மாதிரி கேரக்டர்களாக தேடி வருவதால், நடிக்க வாய்ப்புள்ள கேரக்டர்களை தேர்வு செய்து நடிக்கவேண்டும் என்பதற்காக ஒரு சிறிய இடைவெளி விட்டிருக்கிறாராம் பிந்து மாதவி.

ஆனாலும் தற்போது பரவிவரும் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நாளை அல்லது மறுதினம் தனது புதிய பட அறிவிப்பை வெளியிட இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது..