அசோக் செல்வன் சவால்.. சமாளிப்பாரா பிந்து மாதவி..?

நடிகர்திலகம் சிவாஜி நடித்த சூப்பர்ஹிட் படங்களில் ஒன்றுதான் ‘சவாலே சமாளி’. டைட்டில்களை மட்டும் கடன் வாங்கி புதிய படங்களுக்கு வைக்கின்ற இந்த நவீன ட்ரெண்டில், தான் இயக்கும் புதிய படத்திற்கு ‘சவாலே சமாளி’ என பெயர் வைத்திருக்கிறார் ‘கழுகு’ சத்யசிவா.

பீட்சா-2, தெகிடி மூலம் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமான அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் பிந்து மாதவி. முக்கிய வேடத்தில் ஜெகன் நடிக்க நாசர், ஊர்வசி, கருணாஸ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இதில் உண்டு.

“கழுகு, படத்திலிருந்து மாறுபட்டு இந்த படத்தை உருவாக்க நினைத்தேன். அதனால் முழுக்க முழுக்க காமெடி படமாக இதை உருவாக்கி உள்ளோம். படித்த இரண்டு இளைஞர்கள் வாழ்வில் முன்னேற சந்திக்கும் சவால்கள்தான்  ‘சவாலே சமாளி” என்கிறார் இயக்குனர் சத்யசிவா. அருண்பாண்டியன் தயாரித்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடக்க இருக்கிறது.