தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தின் வெற்றியும், குறிப்பாக அதில் தனது நடிப்புக்கு ரசிகர்களிடம் இருந்து கிடைத்த பாராட்டும் கொடுத்த உற்சாகத்தில் இருக்கிறார் பிந்துமாதவி. அதனால் தனது ரசிகர்களுக்கு உகாதி பண்டிகை கொண்டாட்டத்தின் ஒரு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுக்கும் விதமாக டிவிட்டரில் ரசிகர்களுக்கான பக்கத்தை ஆரம்பித்துள்ளார்.
@Bindu_fans என்கிற பெயரில் டிவிட்டரில் உருவாகியுள்ள இந்தப்பக்கத்தில் இனி பிந்துமாதவி நடிக்கும் படங்கள், அவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் பற்றிய விபரங்கள் உடனுக்குடன் ரசிகர்களின் பார்வைக்கு கொண்டுவரப்படும். இதன்மூலம் உண்மையான தகவல்களை ரசிகர்களுக்கு தருவதுடன் வீண் வதந்திகள் தனது ரசிகர்களை சென்றடையாமல் இருக்கவும் தடுப்பணை போட்டுள்ளார் பிந்துமாதவி.