சவாலை சமாளிப்பாரா பிந்துமாதவி..?

 

பிந்துமாதவி எவ்வளவு நன்றாக நடிக்க கூடியவர் என்பதை தான் இயக்கிய ‘கழுகு’ படம் மூலம் வெளிக்கொண்டு வந்தவர் இயக்குனர் சத்யசிவா. இப்போது மீண்டும் அவரது இயக்கத்தில் ‘சவாலே சமாளி’ படத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பை பெற்றுள்ளார் பிந்துமாதவி. சூதுகவ்வும், தெகிடி ஆகிய படங்களில் நடித்த  அசோக்செல்வன் கதாநாயகனாக நடிக்கிறார்.

முக்கிய வேடத்தில் ஜெகன் நடிக்க, நாசர், ஊர்வசி, கருணாஸ், சுவாதி, கஞ்சாகருப்பு, எம்.எஸ்.பாஸ்கர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இதில் நடிக்கிறது. தமன் இசையமைக்கும் இந்தப்படத்தை தயாரிப்பது நடிகர் அருண்பாண்டியனின் வழங்கும் ஏ&பி குரூப்ஸ்  பட நிறுவனம் தான்.

சரி.. என்ன சவால்.? யாருமே அறிந்திராத ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தில் வேலை செய்கிறார்கள் அசோக்செல்வன் மற்றும் ஜெகன் கோஷ்டியினர்.. சேனல் வளர்ச்சியடையாத போது ஜாலியாக இருந்தவர்களுக்கு, ஒரு கட்டத்தில் சேனல் அமோக வளர்ச்சி அடைந்தபின் பிரச்சனைகள் வருகிறது.  அதிலிருந்து அவர்கள் மீண்டார்களா? என்பது தான் கதை. கழுகு’ படம் போல இதில் நோ செண்டிமெண்ட்.. முழுக்க முழுக்க காமெடிதானாம்..