தீபாவளிக்கு தில்லாக வெளிவரும் ‘பில்லா பாண்டி’..!

Billa Pandi Audio Launch Still

ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாக நடித்துள்ள படம் பில்லா பாண்டி. கதாநாயகியாக மேயாத மான் இந்துஜா நடிக்க, சசிகுமாரின் குட்டிப்புலி, மற்றும் தர்மதுரை உள்ளிட்ட சில படங்களில் காமெடியனாக நடித்த ராஜா சேதுபதிதான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இதில், நடிகர் விவேக், சீமான், கருணாஸ், சத்யஜோதி தியாகராஜன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இந்தப்படத்தில் ஆர்.கே.சுரேஷ் அஜித் ரசிகராக பில்லா பாண்டி என்கிற கேரக்டரில் நடித்துள்ளார். அதனால் அதற்கேற்றவாறு நேற்றைய விழாவில் விழா நடைபெற்ற கலைவாணர் அரங்கம் முழுதும் அஜித் ரசிகர்களின் ஆரவாரத்தால் அதிர்ந்தது. இந்தப்படம் தீபாவளி அன்று திரைக்கு வருகிறது.

விஜய் படம் தீபாவளிக்கு வெளியாகும் நிலையில் அஜித் படம் வெளியாகாத குறைய அவரது ரசிகராக ஆர்கே.சுரேஷ் நடித்துள்ள இந்தப்படம் ஓரளவு நிவர்த்தி செய்யும் என்கிற திரையத்தில் தான் தீபாவளியன்றே இந்தப்படத்தையும் தில்லாக வெளியிடுகிறார்கள்.