தளபதி விஜயின் “பிகில்” அக்டோபர் 25 முதல் திரைக்கு வருகிறது !

தளபதி விஜய் நடிப்பில் ,அட்லி இயக்கத்தில் ,இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கல்பாத்தி S அகோரம் அவர்களின் ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் “பிகில் ” படத்தை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளனர்..

இப்படத்தை ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பாக கல்பாத்தி S. அகோரம், கல்பாத்தி S.கணேஷ், கல்பாத்தி S.சுரேஷ் தயாரித்துள்ளனர். கிரியேட்டிவி தயாரிப்பாளர் – அர்ச்சனா கல்பாத்தி.

வில்லு படத்திற்கு பிறகு தளபதி விஜயுடன் நடிகை நயன்தாரா இந்தப்படத்தில் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

மேலும் விவேக், கதிர் ,ஜாக்கி ஷெரஃப், டேனியல் பாலாஜி, ஆனந்த் ராஜ், தேவதர்ஷினி, யோகிபாபு, மனோபாலா, LM விஜயன், இந்துஜா, அமிர்தா ஐயர், ரெப்பா மோனிகா ஜான், வர்ஷா பொல்லாமா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் பாடல்களின் நல்ல வரவேற்ப்பிற்கு பிறகு இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி தமிழ் சினிமாவில் புதிய சாதனையை படைத்தது .

தற்போது இத்திரைப்படம் அக்டோபர் 25 ஆம் தேதி முதல் திரைக்கு வருகிறது என படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.